close
Choose your channels

திருமணத்திற்கு பின் சமந்தாவின் ஹாட்ரிக் வெற்றி

Saturday, May 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் வாய்ப்பு குறைந்துவிடும். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படங்கள் ஹிட்டாகுவது அரிதாகவே இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது 

சமந்தாவின் திருமணத்திற்கு பின்னர் வெளிவந்த ராம்சரணின் 'ரங்கஸ்தலம் ஏற்கனவே நல்ல வெற்றியை பெற்று வசூலை குவித்த நிலையில் நேற்று வெளியான 'சாவித்திரி வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம் மற்றும் விஷாலுடன் சமந்தா நடித்த ''இரும்புத்திரை' ஆகிய படங்களும் பார்வையாளர்களிடையே பெரும் ஆதரவை பெற்றதோடு ஊடகங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த இரண்டு படங்களும் வெற்றி பெறுவது உறுதி என்பதால் சமந்தாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது.

மேலும் அவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் நடித்து வரும் 'சூப்பர் டீலக்ஸ் மற்றும் கன்னட ரீமேக் படமான 'யூடர்ன்' ரீமேக் ஆகிய படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.