close
Choose your channels

நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்ட நிக்கி கல்ராணி:க்யூட் ரொமான்ஸ் காட்சிகள்!

Tuesday, March 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதியின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்பதும் இரு வீட்டார் கலந்துகொண்ட இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

மேலும் விரைவில் தங்களது திருமண தேதியை அறிவிக்க இருப்பதாகவும் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்டுள்ளார் நிக்கி கல்ராணி. ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர்களின் க்யூட் ரொமான்ஸ் காட்சிகள் உள்ள இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிக்கி கல்ராணி நடித்த ‘இடியட்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அவர் இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் ஆதி, லிங்குசாமி இயக்கி வரும் ‘தி வாரியர்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.