close
Choose your channels

சென்னை மெட்ரோவுக்கு ரூ.63ஆயிரம் கோடி: மத்திய பட்ஜெட் 2021ன் முக்கிய அம்சங்கள்

Monday, February 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

* சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு

* பெருநகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும்

* நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023 டிசம்பருக்குள் மின்மயமாக்கப்படும். சரக்கு ரயில் போக்குவரத்திற்கு தனிப் பாதை உருவாக்கி வருவாயை பெருக்கத் திட்டம்

* வீடுகளுக்கு நேரடியாக கேஸ் விநியோகிக்கும் திட்டத்தில் கூடுதலாக 100 மாவட்டங்கள் சேர்க்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மேலும் 1 கோடி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு

* எல்.ஐ.சி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு. அதேபோல் IDBI வங்கியை முற்றிலும் தனியார்மயமாக்க முடிவு.

* மேலும் 2 பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படும். அதே நேரத்தில் அரசு வங்கிகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

* காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீடு 49% இருந்து 74% ஆக அதிகரிப்பு

* மின்நுகர்வோர் தாம் விரும்புகிற நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரத்தை பெற புதிய திட்டம். மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்

* இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்

* இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாகக் கவனிக்கப்படும்

* பழைய வாகனங்களைத் திரும்பப் பெறும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்

* மூன்று ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஏழு ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்

* உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படும்

* ஜூன் 2022ம் ஆண்டுக்குள் மேற்கு - கிழக்குப் பகுதிகளில் சரக்கு பாதை அமைக்கப்படும்

* காற்று மாசுவை தடுக்க ரூ.2,217 கோடி ஒதுக்கீடு

* கடந்த ஆண்டை காட்டிலும் சுகாதாரத்துறைக்கு ரூ.1,57,988 கோடி அதிகமாக ஒதுக்கீடு

* பங்குச்சந்தைகளை ஒழுங்குப்படுத்த புதிய சட்டம் உருவாக்கப்படும்

* வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.