வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்ட நித்யானந்தா.. நன்றி தெரிவித்த இயக்குனர் மோகன் ஜி..!

  • IndiaGlitz, [Friday,March 10 2023]

இயக்குனர் மோகன் ஜிக்கு வாழ்த்து தெரிவித்து நித்யானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு தனது நன்றிகள் என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன் பிறகு இவரது இயக்கத்தில் உருவான ’திரௌபதி’ ‘ருத்ரதாண்டவம்’, ‘பகாசூரன்’ ஆகிய படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் நித்யானந்தா, ‘வள்ளல் மகாராஜரின் நூல் வெற்றிகரமாக வெளி வந்ததற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இதனை முகநூலில் பகிர்ந்த மோகன் ஜிக்கு தனது வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த வீடியோவை நித்யானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோவுக்கு மிக்க நன்றிகள் என மோகன் ஜி நன்றி தெரிவித்துள்ளார். நித்யானந்தாவின் வாழ்த்தும் மோகன் ஜி நன்றியும் சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

More News

செல்வராகவனை சந்தித்தாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? விரைவில் நல்ல செய்தி?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் செல்வராகவனை சந்தித்ததாகவும் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் கூறப்படுகிறது. 

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த 80s வில்லன்.. இன்னும் எத்தனை வில்லன்கள்?

 தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தில் ஏற்கனவே பல வில்லன் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது புதிதாக 80s நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

நயன்தாராவின் அடுத்த பட ஹீரோ, இயக்குனர் இவர்களா? ஆச்சரிய தகவல்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடித்து வரும் 'ஜவான்' என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. 

பாடகி அனுராதா ஸ்ரீராம் கணவரா இவர்? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!

 பிரபல பின்னணி பாடகியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவருமான அனுராதா ஸ்ரீராமின் குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு  நடிகை கே ஆர் விஜயா நடிக்கும் “மூத்தகுடி”: இறுதிக்கட்ட படப்பிடிப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா நடிக்கும் “மூத்தகுடி” திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.