close
Choose your channels

வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்ட நித்யானந்தா.. நன்றி தெரிவித்த இயக்குனர் மோகன் ஜி..!

Friday, March 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மோகன் ஜிக்கு வாழ்த்து தெரிவித்து நித்யானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு தனது நன்றிகள் என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன் பிறகு இவரது இயக்கத்தில் உருவான ’திரௌபதி’ ‘ருத்ரதாண்டவம்’, ‘பகாசூரன்’ ஆகிய படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் நித்யானந்தா, ‘வள்ளல் மகாராஜரின் நூல் வெற்றிகரமாக வெளி வந்ததற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இதனை முகநூலில் பகிர்ந்த மோகன் ஜிக்கு தனது வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த வீடியோவை நித்யானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோவுக்கு மிக்க நன்றிகள் என மோகன் ஜி நன்றி தெரிவித்துள்ளார். நித்யானந்தாவின் வாழ்த்தும் மோகன் ஜி நன்றியும் சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.