திடீரென பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். சற்று முன்னர் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அவர்களை சந்தித்து நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் பீகார் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேஜஸ்வி துணை முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் தரப்பில் இருந்து மறைமுகமாக வலியுறுத்தப்பட்டதாகவும், இதற்கு முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் ஒப்புக்கொள்ளாததால் நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே பின்தங்கிய மாநிலமாக இருந்த பீகார் மாநிலத்தை நிதீஷ்குமார் தனது நிர்வாகத்திறமையால் முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'பில்லா 3' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் நடித்த 'பில்லா' படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பில்லா 3' படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது.

வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்க்கும் சீயான் விக்ரம்

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்திலும், விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்; படத்திலும் நடித்து வருகிறார்

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பியன் யூனியன் அதிரடி முடிவு

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் நீக்கியுள்ளது.

நெடுவாசல் போராட்ட மாணவர் குபேரன் ஜாமீனில் விடுதலை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டத்திற்கான மாணவர் குபேரன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அடுத்த வார தலைவர் போட்டியில் ஜூலி: அதிர்ச்சியில் நேயர்கள்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தலைவருக்கான போட்டி நடைபெற்று அதில் வெற்றி பெறுபவர் தலைவராக நியமனம் செய்யப்படுவது வழக்கம். இதுவரை சினேகன், காயத்ரி, கணேஷ், வாசு, மீண்டும் சினேகன் ஆகியோர் தலைவர்களாக இருந்துள்ளனர்...