close
Choose your channels

வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்க்கும் சீயான் விக்ரம்

Wednesday, July 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்திலும், விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்; படத்திலும் நடித்து வருகிறார். இவற்றில் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதனையடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'சாமி 2' படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் வெகுவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த், விக்ரமிடம் ஒன்லைன் கதையை கூறியுள்ளதாகவும், இந்த கதை விக்ரமுக்கு பிடித்துவிட்டதால் வெகுவிரைவில் இருவரும் வெகுவிரைவில் கைகோர்க்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.