close
Choose your channels

முத்தம் கொடுத்த நிவேதா பெத்துராஜூக்கு கிடைத்தது என்ன தெரியுமா? வைரல் வீடியோ

Tuesday, July 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ் முத்தம் கொடுத்த நிலையில் அந்த முத்தத்திற்கு பதிலாக கிடைத்தது என்ன என்பது குறித்து வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

நடிகைகள் என்றாலே அவர்கள் செல்லப்பிராணிகளை வளர்த்து வருவார்கள் என்பது தெரிந்தது. அந்த வகையில் நிவேதா பெத்துராஜ் விதிவிலக்கு அல்ல என்ற வகையில் அவரும் சில செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். அவற்றில் ஒன்றான பூனையை கொஞ்சும் வகையில் பூனைக்கு நிவேதா முத்தம் கொடுத்தார். நிவேதாவின் முத்தத்தை பெற்று கொண்ட அந்த பூனை பதிலுக்கு நிவேதா பெத்துராஜூக்கு முத்தம் கொடுத்ததோடு நாக்கால் வருடியது.

இதுகுறித்த வீடியோவை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சாய் பல்லவி நடித்த ’விரட்டா பருவம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் கடந்த மாதம் ரிலீசானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.