தமிழகம் முழுவதும் ஜூலை 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு

தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுப்பதற்காக, பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, 24.03.2020 முதல்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்‌ தொடர்ந்து கொரோனா தொற்றின்‌ நிலைமையை கருத்தில்‌ கொண்டும்‌, மக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டும்‌, சில தளர்வுகளுடன்‌ 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுக்க மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொண்டு வரும்‌ நிலையில்‌, கொரோனா நோய்த்‌ தொற்று பரவலை கட்டுப்படுத்தும்‌ நோக்குடன்‌, மாநிலத்தில்‌ தனியார்‌ மற்றும்‌ அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.07.2020 முதல்‌ 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன்‌ 31.07.2020 முடிய தனியார்‌ மற்றும்‌ அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது.

தமிழ்நாடு அரசின்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

ரூ.75 ஆயிரம் கோடி இந்தியாவில் முதலீடு: பிரதமருடன் உரையாடிய பின் சுந்தர்பிச்சை அறிவிப்பு

பிரதமர் மோடியுடன் உரையாடிய சில நிமிடங்களில் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமைச்சரா இருந்தா என்ன??? யாரா இருந்தா என்ன??? ரூல்ஸ்னா ரூல்ஸ்தா… கெத்து காட்டிய பெண் போலீஸ்!!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்தது மட்டுமல்லாமல் நான் யார் தெரியுமா என்று கெத்து காட்டியவர்களிடம் நீங்கள் யாராக இருந்தால் என்ன

இன்னொரு பெண்ணுடன் தொடர்பு: மும்பை நடுரோட்டில் கணவனை விரட்டி விரட்டி அடித்த பெண்

தனது கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் நட்பு இருப்பதை தெரிந்து கொண்ட பெண் ஒருவர் நடுரோட்டில் கணவனை விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இளம்பெண்ணின் தொண்டையில் 1.5 இன்ச் நீள புழு: பச்சையாக மீன் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்

25 வயது இளம்பெண் ஒருவர் பச்சையாக மீன் சாப்பிட்டதால் அவரது தொண்டையில் ஒன்றரை இன்ச் நீளத்துக்கு புழு ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா பார்ட்டியில் பங்கேற்ற இளைஞர் பரிதாப பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வந்தாலும் இன்னும் ஒரு சிலர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி என்றும் கொரோனா வைரஸ்