ஸ்டெர்லைட்டுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: தமிழிசை

  • IndiaGlitz, [Thursday,May 24 2018]

தூத்துகுடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் காரணமாக மூன்றாவது நாளாக இன்றும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற அரசியல் தலைவர்கள் தூத்துகுடிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தூத்துகுடி சம்பவம் குறித்து பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஸ்டெர்லைட்டுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்றும், தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்ததற்கு அரசியல்வாதிகளே காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்றிருக்க வேண்டும் என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டுபவர்களை கண்டறிந்து ஒடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

மேலும் மு.க.ஸ்டாலின், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சனைகளை தூண்டிவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்ட தமிழிசை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஆர்எஸ்எஸ் காரணம் எனா உளறும் ராகுல் காந்தியைக் கண்டிப்பதாககவும், ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

More News

தூத்துகுடி செய்தியை ஒளிபரப்பிய அல் ஜசீரா தொலைக்காட்சி

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தூத்துகுடி மக்களின் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100 நாட்கள் போராட்டத்தை வட இந்திய ஊடகங்களே இதுவரை கண்டுகொள்ளமல் இருந்த நிலையில்

சரித்திரம் காணாத  புரட்சி  வெடிக்கும்.  இண்டர்நெட் துண்டிப்பு குறித்து கமல்

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் மற்றும் நேற்று ஏற்பட்ட வன்முறையால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒட்டு மொத்த தமிழகம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிரிக்கெட் பயிற்சி தரும் ஆஸ்திரேலியா வீரர்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்காமராஜ் இயக்கி வரும் 'கனா' படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது தந்தையாக சத்யராஜ் நடித்து வருகின்றனர்

தூத்துகுடி பதட்டம் எதிரொலி: 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்