close
Choose your channels

மக்கள் மனதை வென்றவர் அசீமும் இல்ல, விக்ரமனும் இல்லை.. ஷிவின் தான்: வைரல் வீடியோ

Wednesday, January 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நான்கு நாட்கள் ஆகிய போதிலும் டைட்டில் வின்னர் குறித்த பிரச்சனை இன்னும் பார்வையாளர்கள் மத்தியில் தீரவில்லை. அசீம் டைட்டில் வின்னராக இருந்தாலும் மக்களின் ஆதரவு பெற்றவர் விக்ரமன்தான் என்றும் அவர் தான் உண்மையான டைட்டில் வின்னர் என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மக்களின் மனதை வென்றவர் அசீமும் இல்லை, விக்ரமனும் இல்லை, ஷிவின் தான் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருவது மட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பெற்ற ஷிவினை திறந்த காரில் அவரது ரசிகர்கள் அழைத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஷிவின் போஸ்டர்கள் பேனர்கள் கட்டப்பட்ட காரில் அவர் ரசிகர்களை நோக்கி கை அசைக்கும் காட்சிகளும் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு தரும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 106 நாட்கள் தாக்குப்பிடித்து ஆண், பெண் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஒரு திருநங்கை போட்டியாளர் இறுதி போட்டியில் கலந்து கொண்டதே மிகப்பெரிய வெற்றி என்றும் அவர் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos