close
Choose your channels

தேவிஸ்ரீ பிரசாத்தை மட்டுமல்ல, அனைவரையும் மனதார வாழ்த்திய கமல்ஹாசன்.. வைரல் அறிக்கை..!

Friday, August 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று 69 வது தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது பெற்ற தேவிஸ்ரீ பிரசாத் அவர்களை மட்டும் வாழ்த்தியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

69-வது தேசிய திரைப்பட விருதுகள்‌ ௮றிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த்‌ திரைப்படத்திற்கான விருது கடைசி விவசாயி படத்திற்கும்‌, அதில்‌ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மறைந்த நல்லாண்டி அவர்களுக்கு ஸ்பெஷல்‌ மென்ஷன்‌ அங்கீகாரமும்‌ கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தயாரிப்பாளர்‌ விஜய்‌ சேதுபதி, இயக்குனர்‌ மணிகண்டன்‌ மற்றும்‌ குழுவினருக்கு என்‌ அன்பும்‌ பாராட்டும்‌.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும்‌ முதல்‌ தெலுங்கு நடிகர்‌ எனும்‌ புதிய சரித்திரத்தைப்‌ படைத்திருக்கும்‌ அல்லு அர்ஜூன்‌, சிறந்த படமாக‌ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்‌“ திரைப்படத்தின்‌ இயக்குனர்‌ ஆர்‌. மாதவன்‌ மற்றும்‌ குழுவினர்‌, பல பிரிவுகளில்‌ விருதுகளை அள்ளிய ஆர்‌.ஆர்‌.ஆர்‌. திரைப்படத்தின்‌ இயக்குனர்‌ ராஜமெளலி மற்றும்‌ குழுவினர்‌, புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல்‌ இசை பிரிவில்‌ விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்‌, இரவின்‌ நிழல்‌ படத்தின்‌ பாடலுக்காக சிறந்த பாடகிவிருது பெற்ற ஷ்ரேயா கோஷல்‌, சிறந்த கல்வித்‌ திரைப்படம்‌ பிரிவில்‌ “சிற்பங்களின்‌ சிற்பங்கள்‌“ படத்தை இயக்கி விருது வென்றுள்ள இயக்குநர்‌ பி. எலனின்‌, “கருவறை“ ஆவணப்‌ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர்‌ விருது பெற்ற ஸ்ரீகாந்த்‌ தேவா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும்‌ என்‌ மனப்பூர்வமான வாழ்த்துக்களையும்‌ பாராட்டுதல்களையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

தென்னிந்திய சினிமா உள்ளடக்கத்திலும்‌, தொழில்நுட்பத்திலும்‌ பல புதிய உச்சங்களை எட்டியதன்‌ அடையாளம்‌ தேசிய விருதுகளின்‌ பட்டியலில்‌ எதிரொலிக்கிறது. இந்த வெற்றி தொடரட்டும்‌!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment