இன்று அஜித் தினம் மட்டுமல்ல... சிம்புவின் தினமும் கூட.. செம அப்டேட்!

  • IndiaGlitz, [Saturday,December 31 2022]

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதை அடுத்து 'துணிவு’ படத்தின் ஹேஷ்டேக் நேற்று இரவு முதலே இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும் இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 'துணிவு’ படத்தின் பாடல்கள் மற்றும் ஸ்டில்கள் மட்டுமே வந்த நிலையில் டீசர் இல்லமால் நேரடியாக டிரைலர்ர் வெளிவருவதால் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

'துணிவு’ தினம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இன்று அஜீத்தின் 'துணிவு’ தினம் மட்டுமின்றி இன்ரு சிம்புவின் தினமும் என சிம்பு ரசிகர்களும் போட்டியாக சமூகவலைதளத்தில் களமிறங்கியுள்ளனர். இதற்கு காரணம் சிம்பு நடித்த ’பத்து தல’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ’பத்து தல’ திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'விடுதலை' படத்தின் முக்கிய அப்டேட்டை கொடுத்த சூரி.. வைரல் புகைப்படங்கள்!

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்த 'விடுதலை' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறி தனது சமூக வலைத்தளத்தில் சூரி பதிவு செய்துள்ளார்.

இன்று ஒரே நாளில் வெளியான 'துணிவு' படத்தின் 8 அப்டேட்கள்: முழு விபரங்கள்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

உங்கள் மகள் மட்டும் காவி பிகினி அணியலாமா? பிரபல இயக்குனரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

 ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த 'பதான்' என்ற திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் காவி உடையில் ஆபாசமான

ரஜினி, தனுஷ், நயன்தாராவை அடுத்து போயஸ் கார்டனுக்கு செல்லும் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனுஷ், ஜெயம் ரவி உள்பட ஒரு சில நடிகர்கள் போயஸ்கார்டனில் குடியிருக்கும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் பிரபல நடிகர் சந்தானம்

'நன்றியும் காதலும்': நயன்தாரா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான 'கனெக்ட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.