close
Choose your channels

இன்று அஜித் தினம் மட்டுமல்ல... சிம்புவின் தினமும் கூட.. செம அப்டேட்!

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதை அடுத்து 'துணிவு’ படத்தின் ஹேஷ்டேக் நேற்று இரவு முதலே இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும் இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 'துணிவு’ படத்தின் பாடல்கள் மற்றும் ஸ்டில்கள் மட்டுமே வந்த நிலையில் டீசர் இல்லமால் நேரடியாக டிரைலர்ர் வெளிவருவதால் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

'துணிவு’ தினம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இன்று அஜீத்தின் 'துணிவு’ தினம் மட்டுமின்றி இன்ரு சிம்புவின் தினமும் என சிம்பு ரசிகர்களும் போட்டியாக சமூகவலைதளத்தில் களமிறங்கியுள்ளனர். இதற்கு காரணம் சிம்பு நடித்த ’பத்து தல’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ’பத்து தல’ திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.