close
Choose your channels

த்ரிஷா மட்டுமல்ல.. மேலும் சில கேமியோ கேரக்டர்கள்.. 'கோட்' படத்தில் ஒரு சர்ப்ரைஸ்..!

Thursday, April 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் சில பிரபலங்கள் கேமியோ கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக இருந்தது என்பதும் அதேபோல் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்டோர் நடித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் உருவாகும் சில படங்களில் அண்டை மாநில சூப்பர் ஸ்டார்கள் சில படங்களில் கேமியோ நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் ஏற்கனவே த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ள நிலையில் வேறு சில பிரபலங்களும் இந்த படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய ’சரோஜா’ படத்தில் ஜெய், ’பிரியாணி’ படத்தில் சிலம்பரசன், ’கோவா’ படத்தில் நயன்தாரா நடித்திருந்தது போல் ‘கோட்’ படத்திலும் சில பிரபலங்கள் கேமியோவில் கேரக்டரில் நடித்திருப்பதாகவும் இவர்கள் அனைவரும் இந்த படத்தின் கிளைமாக்ஸில் எதிர்பாராத வகையில் தோன்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் தகவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment