பறந்து செனற பறவை மீண்டும் இறைதேடி வீட்டிற்குள்.. பிக்பாஸில் இன்று ஒரு வைல்ட்கார்ட்?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது என்பது இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன்,ஆயிஷா, ராம் ராமசாமி, குயின்ஸி, விஜே கதிரவன், மெட்லி ஒலி சாந்தி, ஷிவின் கணேஷன், தனலட்சுமி, விஜே மகேஷ்வரி, அமுதவாணன், விக்ரமன், ஜனனி, மாடல் நிவாஷினி, அசர் கோளார் ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி நிச்சயம் கலந்து கொள்வார் என யூகிக்கப்பட்ட அனைத்து பட்டியலில் அவரது பெயர் இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் மைனா நந்தினி வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜிபி முத்து, ஜனனி, தனலட்சுமி ,சாந்தி, மகேஸ்வரி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் மைனாவின் எண்ட்ரியால் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அதிக பிரபலமில்லை என்றாலும் நன்றாக ஹோம்வொர்க் செய்து போட்டிக்கு தயார் நிலையில் வந்துள்ளதால், தங்களை முன்னிறுத்திக் கொள்ள பல விஷயங்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மைனாவின் வரவு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி கலந்து கொள்வதை ட்விட்டர் பயனாளர் இமாத் தனது டுவிட்டரில், ‘பறந்து சென்ற பறவை மீண்டும் இறைதேடி வீட்டிற்குள்’ என பதிவு செய்துள்ளார்.

More News

இளம் இசைப்புயல் அனிருத்துக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

இன்றைய தலைமுறை இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அனிருத்துக்கு இன்று பிறந்தநாள் என்ற நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

விக்ரம் - பா ரஞ்சித் படத்தில் விஜய் பட நாயகியா? அப்ப ராஷ்மிகா இல்லையா!

விக்ரம் நடித்த 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நாளை மு

நயன்தாராவின் உண்மையான திருமண தேதி.. முடிவுக்கு வரும் வாடகைத்தாய் விவகாரம்

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருடைய உண்மையான பதிவு திருமணம் 6 ஆண்டுகளுக்கு முன்பே நடந்ததாக

கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக சூர்யாவின் 2D நிறுவனம் வழங்கிய வாகனம்!

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம்

விஜய்சேதுபதியின் அடுத்த பட டீசர் எப்போது? இயக்குனர் தகவல்!

இந்தாண்டு விஜய் சேதுபதி நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' 'விக்ரம்' மற்றும் மாமனிதன் ஆகிய மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது வெற்றிமாறனின் 'விடுதலை'