close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த பட டீசர் எப்போது? இயக்குனர் தகவல்!

Saturday, October 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தாண்டு விஜய் சேதுபதி நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' 'விக்ரம்' மற்றும் மாமனிதன் ஆகிய மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது வெற்றிமாறனின் 'விடுதலை' உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'மைக்கேல்' என்பதும் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் இந்தப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'மைக்கேல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

சாம் சிஎஸ் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை ஏற்கனவே ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.