close
Choose your channels

விஜய்யின் 'தளபதி 69'  இயக்குனர் பட்டியலில் இணைந்த இன்னொரு இயக்குனர்.. மீண்டும் ஒரு 'வாரிசு' திரைப்படமா?

Friday, February 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தின் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதால் ‘தளபதி 69’ படத்திற்கு பின் அவர் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வரும் நிலையில் தற்போது புதிதாக இன்னொரு இயக்குனர் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

’தளபதி 69’ திரைப்படத்தை அட்லி , கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் ‘குண்டூர்காரம்’ உள்பட தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள திரிவிக்ரம் ’தளபதி 69’ படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே இந்த படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதால் திரிவிக்ரம் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளரின் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்த நிலையில் இன்னொரு ‘வாரிசு’ திரைப்படமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே ’தளபதி 69’ படத்தை இயக்குவது யார் என்பது தெரியவரும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment