மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: 4வது எம்.எல்.ஏ என்பதால் தொண்டர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Sunday,June 28 2020]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 3000க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாமர மக்களை மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களையும் அவ்வப்போதுப் பாதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பதும் மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே திமுகவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா உறுதி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவதாக செஞ்சி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக தொண்டர்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளது

More News

'சிங்கம்' சீரீஸ் படங்களை இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி

இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் பலர் வீட்டிற்கு கூட செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் கொரோனா வைரசிடம் இருந்து

ரூ.36 ஆயிரம் கரெண்ட் பில்: தனுஷ் நாயகியும் குற்றச்சாட்டு

கரண்ட் தான் ஷாக் அடிக்கும் என்றால் தற்போது கரன்ட் பில்லும் மக்களைக் ஷாக் அடித்து வருவதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம் 

மணமகனுக்கு கொரோனா: திருமணம் நடத்திய குடும்பத்தினர்களுக்கு ரூ.6.26 லட்சம் அபராதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து இந்த திருமணத்திற்கு அளவுக்கு அதிகமான நபர்களை அழைப்பு

தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது என்றும், கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிரிழந்தனர்

கொரோனாவால் இறந்த கணவர், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி: திக்கற்று இருக்கும் இரு மகள்கள்

கொரோனா வைரஸால் கணவர் பலியான நிலையில் அவரது மனைவி அந்த அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்