மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்.. பிக்பாஸ் இந்த சீசன் ஃபுல்லா விஜய் டிவி புரடொக்ட்ஸ் தானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக வெற்றிகரமாக இருந்த நிலையில் 6வது சீசன் வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சீசன் 6ல் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே இந்த சீசனில் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜலட்சுமி, விஜய் டிவியின் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைனா நந்தினி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சீசனில் விஜய் டிவி புரடொக்ட் அதிகம் என்று கூறப்பட்ட நிலையில் விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான அமுதவாணன் என்பவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் டிவியின் நடன நிகழ்ச்சிகளிலும், காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர் என்பது தெரிந்ததே.

ஆக மொத்தத்தில் இந்த சீசனில் பெரும்பாலும் விஜய் டிவி புரடொக்ட்ஸ்களாக இருப்பார்கள் என்று வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

More News

நீச்சல் குளத்தில் கண் சிமிட்டும் பிரியா வாரியர்: செம ஹாட் புகைப்படங்கள்!

'ஒரு ஆதார் லவ்' என்ற மலையாள படத்தில் நடித்த பிரியாவாரியர் ஒரே ஒரு கண் சிமிட்டல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் என்பதும் அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது

'லத்தி' படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட விஷால்: வீடியோ வைரல்

விஷால் நடித்த 'லத்தி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் மாஸ்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறிய சூர்யா: எதற்கு தெரியுமா?

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

நீண்ட இடைவெளிக்கு பின் பாவாடை தாவணியில் ரம்யா பாண்டியன்.. குவியும் லைக்ஸ்!

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில வாரங்களாக கிளாமரில் உச்சகட்டமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது மங்களகரமாக பாவாடை தாவணியில் எடுக்கப்பட்ட

டிஸ்சார்ஜ் ஆனார் போண்டாமணி.. ரஜினி,அஜித், விஜய்க்கு வேண்டுகோள்!

காமெடி நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.