இதற்காகத்தான் படபூஜையில் கலந்து கொள்வதில்லை: சமந்தா

  • IndiaGlitz, [Wednesday,July 25 2018]

பிரபல நடிகை சமந்தாவுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டு என்றே கூறலாம். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'ரங்கஸ்தலம்', 'நடிகையர் திலகம்' மற்றும் இரும்புத்திரை' ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெற்றன. அதேபோல் அவர் நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் கணவர் நாகசைதன்யாவுடன் சமந்தா ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இந்த பூஜையில் கலந்து கொண்ட சமந்தா, பூஜையின்போது தேங்காய் உடைத்தார். ஆனால் அவரால் தேங்காயை உடைக்க முடியவில்லை. பின்னர் தேங்காயை உடைக்க பூஜை செய்த ஐயர் உதவி செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இந்த வீடியோ குறித்து சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்த ஒரு காரணத்திற்காகவே நான் படபூஜையில் கலந்து கொள்வதில்லை' என்று கூறியுள்ளார்.

More News

மீண்டும் விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கடந்த ஆண்டு தனது 100வது தயாரிப்பு திரைப்படமாக விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை

மும்தாஜை அழவைத்த ஷாரிக்: பிக்பாஸ் திரைக்கதையில் திடீர் டுவிஸ்ட்

பிக்பாஸ் முதல் பாகம் போல் இரண்டாம் பாகத்தையும் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல பிக்பாஸ் ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் பல்வேறு முயற்சி செய்தும் 37 நாட்களாக எந்தவித பலன் கிடைக்கவில்லை

ரஜினியை விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டாம்: சென்னை ஐகோர்ட் கண்டனம்

சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயர்களை பயன்படுத்தி விளம்பரம் தேட வேண்டாம் என்று வழக்கு தொடுத்த ஒருவருக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1983ல் இருந்தே பாலியல் தொல்லை உள்ளது: பழம்பெரும் நடிகை அதிர்ச்சி பேட்டி

கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவுலகில் பாலியல் பிரச்சனை இருப்பதாகவும், இல்லை என்று யாரும் கூறமுடியாது என்றும் கூறியுள்ளார்.

'கோலமாவு கோகிலா' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.