close
Choose your channels

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்.. சின்ன பட்ஜெட் படத்தை ஓட வைக்க சூப்பர் திட்டம்..!

Saturday, December 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையரங்குகளில் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளியானால் கூட்டம் வருவதில்லை என்றும் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே கூட்டம் கூறுகிறது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் சின்ன பட்ஜெட் படத்திற்கும் திரையரங்கிற்கு பார்வையாளர்களை வரவைக்க தயாரிப்பாளர் கேயார் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்ற புதுமையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

’ஈரமான ரோஜாவே’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் கேயார். இவர் தற்போது விதார்த் நடித்த ’ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தை வெளியிடுகிறார். டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்றும் ஆனால் இந்த சலுகை முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளார்.

பொதுவாக சின்ன பட்ஜெட் படத்தை பார்க்க வருபவர்கள் சின்ன பட்ஜெட் படத்திற்கும் ரூ.120 டிக்கெட் விலையா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். அதாவது 100 கோடி ரூபாய் பட்ஜெட் தயாரித்து வெளியாகும் படத்திற்கும், ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படத்திற்கும் ஒரே டிக்கெட் விலையா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்

இந்த கேள்விகளுக்கு பதிலடியாக ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று கேயார் அறிவித்துள்ளதை அடுத்து ’ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் அதிகம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் அனைத்து சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களும் இதனை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment