இசையமைப்பாளருக்கு ஐபோன் வாங்கி பரிசளித்த சுந்தர் சி பட இயக்குனர்..

  • IndiaGlitz, [Thursday,September 14 2023]

இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு ஐபோன் வழங்கி ஒன் 2 ஒன் பட இயக்குநர் கே திருஞானம் அசத்தியுள்ளார். இந்த படத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து நடித்துள்ளனர்.

24 ஹார்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் ஒன் 2 ஒன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். மேலும் அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் கே.திருஞானம் அவருக்கு ஒரு புதிய ஐபோன் பரிசளித்துள்ளார்.

திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்திரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

More News

'ஜவான்' பாடலுக்கு செம்ம ஆட்டம் போடும் ப்ரியா அட்லி, கீர்த்தி சுரேஷ்.. அட்லி என்ன செய்கிறார் பாருங்க..!

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஜவான்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அட்லியின் மனைவி பிரியா அட்லி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் செம ஆட்டம் ஆடும் வீடியோ

பிரபாஸ் அடுத்த படத்தில் நயன்தாரா உள்பட 3 பிரபலங்கள்.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

ஷாருக்கான் உடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஜவான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும் நிலையில் தற்போது அவர் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம்.. டைட்டில் வீடியோ ரிலீஸ்..!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் கதாநாயகனாக நடித்த 'நாய்சேகர்' மற்றும் 'ஓ மை கோஸ்ட்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து அவர் கதாநாயகனாக

மலேசிய விஜய் ரசிகர்களுக்கு ஜாக்பாட்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த 'லியோ' படக்குழு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் தான் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை..! கோலிவுட் ஆச்சரியம்..!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகிய நான்கு மாஸ் நடிகர்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது  திரை உலகிற்கு வரும் நடிகைகளின் ஆசையாக இருக்கும்.