close
Choose your channels

இசையமைப்பாளருக்கு ஐபோன் வாங்கி பரிசளித்த சுந்தர் சி பட இயக்குனர்..

Thursday, September 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையில் மிரட்டிய இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு ஐபோன் வழங்கி "ஒன் 2 ஒன்" பட இயக்குநர் கே திருஞானம் அசத்தியுள்ளார். இந்த படத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து நடித்துள்ளனர்.

24 ஹார்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் "ஒன் 2 ஒன்". இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். மேலும் அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் கே.திருஞானம் அவருக்கு ஒரு புதிய ஐபோன் பரிசளித்துள்ளார்.

திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்திரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.