தேசத்துரோக வழக்கு: வைகோவுக்கு ஒராண்டு சிறை

  • IndiaGlitz, [Friday,July 05 2019]

வைகோ மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியான நிலையில் இந்த வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிமன்றம் அவருக்கு  ஓராண்டு சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, விடுதலைபுலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது தேசத்துரோக வழக்கு ஒன்று சென்னை ஆயிரம்விளக்கு  காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்ட நிலையில் வைகோவுக்கு ஓராண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில் ரூ.10 ஆயிரம் அபராதத்தை உடனடியாக கட்டிய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு அவசர மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைகோ முடிவு செய்திருந்த நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.