படம் முழுவதும் விஜய்க்கு ஒரே ஒரு காஸ்ட்யூம் தானா? ரசிகர்கள் ஆச்சரியம்

தளபதி விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கசிந்து வரும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த படத்தின் வெளிநாட்டு காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை தவிர படம் முழுவதும் விஜய்க்கு ஒரே ஒரு காஸ்ட்யூம் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் 75 சதவீத காட்சிகள் மால் ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மால் காட்சிகள் முழுவதிலுமே விஜய் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை பனியன் மட்டுமே அணிந்து நடித்துள்ளதாகவும், படம் முடியும் வரை விஜய்க்கு அந்த ஒரு காஸ்ட்யூம் மட்டுமே என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் படத்தில் இதுவரை இல்லாத வகையில் படத்தின் 75 சதவிகித காட்சிகளில் ஒரே ஒரு காஸ்ட்யூம் மட்டுமே அணிந்து விஜய் நடித்து இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ராகவா லாரன்ஸ் சந்திப்பில் இதுவும் நடந்ததா? ரசிகர்கள் ஆச்சர்யம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கியுள்ளார் என்பதும் இந்த மியூசிக் ஆல்பத்தை நேற்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸிடம் காண்பித்த்தாகவும்

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

'மாமன்னன்' படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு: மாரி செல்வராஜ் செய்த மரியாதை!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது

சூர்யா-பாலா படத்தில் இணையும் பிரபல நடிகை!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவரது அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்க உள்ளார்

'எனக்கு அவனும் ஒரு மகன் தான்: 'கூகுள் குட்டப்பா' டிரைலர்!

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பா' படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.