இவங்க தமிழ்நாட்ல இருக்குறதுக்கே தகுதியில்லை.. ஓப்பன் நாமினேஷன் செய்த கூல் சுரேஷ்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இன்று நாமினேஷன் படலம் நடைபெறும் காட்சி முதல் புரோமோ வீடியோவில் வெளியாகி உள்ளது.
அதில் விக்ரம் சரவணன் மற்றும் நிக்சன் ஆகிய இருவரும் நாமினேஷன் குறித்து ஆலோசனை செய்யும் காட்சிகள் உள்ளன. இதனை அடுத்து முதல் கட்டமாக அர்ச்சனா வந்து ’நான் நிக்சனை நாமினேட் செய்கிறேன், காரணம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்’ என்று கூறுகிறார்
இதனை அடுத்து வந்த விஷ்ணு, ‘ஒரு வார்த்தையை கூறி இந்த வார்த்தையின் அர்த்தம் டிக்சனரியில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை என்று கூறி பூர்ணிமாவை நாமினேட் செய்கிறார்.
இதனை அடுத்து விசித்ரா வந்து ’எனக்கும் தினேஷுக்கும் ஆகாது என்று இந்த வீட்டுக்கு எல்லாருக்கும் தெரியும்’ என்று கூறி அவரை நாமினேட் செய்கிறார். அதன்பின் வந்த கூல் சுரேஷ், ‘விசித்ராவை பார்த்து அவர் இந்த தமிழ்நாட்டிலே இருக்க தகுதி இல்லாதவர் என்று கூறி அவரை நாமினேட் செய்கிறார்.
மொத்தத்தில் இன்றைய ஓபன் நாமினேஷன் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)