'மெர்சலுக்காக விரைவில் பணம் கொடுப்பேன்: ப.சிதம்பரம்

  • IndiaGlitz, [Sunday,October 22 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனம் குறித்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு இந்த பிரச்சனை தேசிய பிரச்சனையாக உருவாகிவிட்டது. ராகுல்காந்தி, கபில்சிபில் உள்பட தேசிய தலைவர்களே இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள தேசிய தலைவர்களான ப.சிதம்பரம் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களின் கருத்து மோதல் ஊடகங்களின் தலைப்பு செய்திகளாகி வருகிறது.

'மெர்சல்' பிரச்சனை நேற்று கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், 'அரசின் கொள்கைகளை பாராட்டி மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம்' என கிண்டலாக தனது டுவிட்டரில் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'மெர்சல் படத்திற்கு ப.சிதம்பரம் பைனான்ஸ் செய்தாரா? என்றும், உண்மைக்கு புறம்பான விசயங்கள் பரப்புவது தவறு அதுவும்  சிங்கபூரையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பேசுவது ஏற்றுகொள்ள முடியாது என கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள ப.சிதம்பரம், 'மெர்சல் படத்தை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்௧ள் ௭ல்லோரும் அந்த படத்திற்கு பணம் கொடுத்தவர்கள் தான். அந்த வகையில் மெர்சலுக்கு பணம் கொடுக்கும் வாய்ப்பு எனக்கும் விரைவில் கிடைக்கும் என பதிலளித்துள்ளார். 
 

More News

'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சைகள் நாடே அறிந்ததே. நாமும் இந்த விஷயத்தை பலகோணங்களில் செய்திகளை வெளியிட்டோம்.

வேகமாக பரவும் விஜய்யின் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு பாஜக தலைவர்களால் இப்படி ஒரு இலவச விளம்பரம் கிடைக்கும் என்று படக்குழுவினர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

'மெர்சல்' பட விவகாரம்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு பாஜகவினர் எதிர்ப்பும் மிரட்டலும் தெரிவித்தபோது கோலிவுட் திரையுலகமே கொந்தளித்து

மெர்சலுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின்

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு எந்த நேரத்திற்கு தமிழிசை செளந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்தாரோ தெரியவில்லை, தமிழகத்தில் இருந்த ஒருசில செல்வாக்கும் அந்த கட்சிக்கு தற்போது இல்லாமல் போய்விட்டது.

மெர்சலுக்காக மக்களே குரல் கொடுக்க வேண்டும்: விஜய்சேதுபதி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களை பாஜகவினர் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் இந்த படம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டிருக்காது.