நான் இறந்த வதந்தியை கேள்விப்பட்டு நானே சிரித்தேன்: இயக்குனர் பி.வாசு

  • IndiaGlitz, [Tuesday,January 16 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த 'பணக்காரன்', 'மன்னன்' , சந்திரமுகி உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் பி.வாசு. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'சிவலிங்கா'

இந்த நிலையில் நேற்று முதல் பி.வாசு இறந்துவிட்டதாக ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்தி அவருக்கே அவரது வாட்ஸ் அப்-இல் வந்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பி.வாசு சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் மீது அன்பு வைத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் வணக்கம். என்னை பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே வாட்ஸ்ஆப்பில் வந்தது. எனக்கு சிரிப்பு வந்தது. நான் இன்று தான் ஜிம்மில் 6 கிலோமீட்டர் நடந்துவிட்டு வந்த பிறகே இந்த நியூஸ் எனக்கு வந்தது. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரே சிரிப்பு வருகிறது. நான் நல்லா இருக்கிறேன், ரொம்ப நல்லா இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த வருஷம் 3 படங்கள் இயக்கப் போகிறேன்' என்று பி.வாசு அந்த வீடியோவில் தெரிவித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More News

பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' சென்சார் தகவல்கள்

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'நாச்சியார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்துள்ளது.

நாடோடிகள் 2: அஞ்சலியுடன் இணையும் பிரபல நாயகி

நீண்ட இடைவெளிக்கு சசிகுமார்-சமுத்திரக்கனி இணையும் 'நாடோடிகள் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியினை பார்த்தோம்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் படிப்படியாக உழைப்பால் முன்னேறி இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு முன்னேறியுள்ள மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று பிறந்த நாள் கொண்டாடி

சுற்றி வளைத்த ரசிகர்களால் கேட் ஏறி குதித்த சூர்யா

'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் சிறப்பான திரைக்கதை, சூர்யாவின் நடிப்பு, அனிருத்தின் இசை வரவேற்பை பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் மாஸ் அப்டேட்

ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பபோஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவது தெரிந்ததே