close
Choose your channels

'சந்திரமுகி 2' படத்தின் 450 ஷாட்களை காணவில்லை. பி வாசு கூறிய அதிர்ச்சி தகவல்..!

Sunday, September 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சந்திரமுகி 2’ படத்தின் ரிலீசுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் 450 ஷாட்களை காணவில்லை என இயக்குனர் பி வாசு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில், எம் எம் கீரவாணி இசையில் உருவான திரைப்படம் 'சந்திரமுகி 2’. இந்த படம் முதலில் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் திடீரென செப்டம்பர் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி. வாசு விளக்கினார். இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் பட வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்னதாக திடீரென கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் டெக்னீசியன்கள் 450 ஷாட்களை காணவில்லை என்றார்கள். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் நாங்கள் அதை பல இடங்களில் தேடினோம்.

150 டெக்னீசியன்கள் அதை தேடுவதற்கான பணியை செய்தார்கள். அதன் பிறகு நான்கைந்து நாட்களுக்கு கழித்து எங்களுக்கு அந்த காட்சிகள் கிடைத்தது. அதனால்தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos