உள்ளாட்சி தேர்தல்: ரஜினி பட இயக்குனரின் சகோதரர் வெற்றி!

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று மாலையுடன் வாக்கு எண்ணும்பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றுமுன் வெளியான தகவலின்படி திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணி கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களை சுயேட்சையாக களம் நின்று ரஜினி பட இயக்குனரின் சகோதரர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் காலா உள்பட ஒருசில படங்களை இயக்கிய ரஞ்சித் அவர்களின் சகோதரர் பிரபு என்பவர் சென்னை அருகே உள்ள வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார்.

தற்போது முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு 3846 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளம்பருதி 3696 வாக்குகளை மட்டுமே பெற்றதால் பிரபு, 155 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித், அந்த தொகுதிக்கு சென்று தனது சகோதரரின் வெற்றியை கொண்டாடி வருகிறார்.

More News

சிம்புவின் சூப்பர்ஹிட் இரண்டாம் பாக படத்தை தயாரிக்கும் அஜித் பட நிறுவனம்

நடிகர் சிம்பு சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு அவரது திரையுலக வாழ்வில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தந்தை வெற்றி பெற்ற உற்சாகத்தில் மகன் மரணம்: உள்ளாட்சி தேர்தல் சோகம்!

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சோகமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது

மனைவியிடம் கோபம்: தனக்குத்தானே ஆணுறுப்பை அறுத்து கொண்ட சென்னை நபர்!

மனைவியிடம் சண்டை போட்ட ஏற்பட்ட கோபத்தில் கத்தியை எடுத்து தனக்குத்தானே தன்னுடைய ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட சென்னை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இளைஞர்களின் ஆண்டாக மாறும் 2020: உள்ளாட்சி தேர்தலில் கல்லூரி மாணவி வெற்றி

மாணவர்கள் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்வது மட்டுமன்றி அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் கமல்ஹாசன் உள்பட ஒரு சில சமூக அக்கறை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவரும் நிலையில்

ஸ்ரீவில்லிபுத்தூர், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற துப்புரவு தொழிலாளி..!

துப்புரவு பணியாளராக பணியாற்றிய பெண் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.