close
Choose your channels

பா ரஞ்சித்தின் முதல் 'ஏ' சர்டிபிகேட் திரைப்படம்: அப்படி என்ன இருக்கும் படத்தில்?

Friday, August 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதை அடுத்து முதல் முறையாக ’ஏ’ சான்றிதழை பெறும் பா ரஞ்சித் இயக்கிய படம் என்ற பெயரை இந்த படம் பெற்றுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’நட்சத்திரம் நகர்கிறது’. இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து படக்குழுவினர் தற்போது புரமோஷன் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். பா ரஞ்சித் இயக்கிய திரைப்படங்களில் ’ஏ’ சான்றிதழ் பெற்ற ஒரே திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ், காலா மற்றும் சார்பாட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்கள் ’யுஏ’ சான்றிதழ் பெற்றது என்பதும் ’கபாலி’ படம் ’யூ’ சான்றிதழ் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் ‘ஏ’ சான்றிதழை பெற்றுள்ளதை அடுத்து அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment