'காலா 2' படம் குறித்து பா.ரஞ்சித்தின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,June 02 2019]

நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி சினிமாவிலும் தலித் அரசியல் பேசும் இயக்குனர் பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார். இந்த இரண்டு படங்களிலும் ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் தலித் அரசியலை முன்னிறுத்துவதே அவரது நோக்கமாக இருந்ததாக அவர் மீது ரஜினி ரசிகர்கள் குற்றஞ்சாட்டியதுண்டு.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் கஸ்பா-பி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் இரவு பாடசாலைகளை இயக்குனர் பா.ரஞ்சித் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், 'காலா' இரண்டாம் பாகம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, 'காலா படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பு இல்லை என்றும் ஆனாலும் காலா போன்ற திரைப்படங்கள் வர அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அவருடைய பதிலால் ரஜினி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் ஜோதிகாவின் 'ராட்சசி' படத்தின் டிரைலர் குறித்து பேசிய பா.ரஞ்சித், 'இந்த படத்தின் டிரைலரில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தை மையப்படுத்தி உள்ளதாகவும், அது வரவேற்கத்தக்கது என்று கூறினார். இந்த படத்தின் டிரைலரில் பல நல்ல காட்சிகள் இருக்கும்போது அம்பேத்கார் படத்தை காட்டிய காட்சியை மட்டும் ரஞ்சித் குறிப்பிட்டு கூறியது நெட்டிசன்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

More News

நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து கூறிய நடிகைக்கு நேர்ந்த சிக்கல்!

முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின்னர் இந்தியாவின் பெண் நிதியமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வரும் நிலையில்

பிறந்த நாளை முன்னிட்டு இசைஞானி வெளியிடும் முக்கிய அறிவிப்பை!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று 76வது பிறந்தநாள். அவருக்கு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து துறையினர்களும் இன்று காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். 

'ரெளடி பேபி'க்கு கிடைத்த மகத்தான பெருமை!

தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியானது.

விஜய்சேதுபதியுடன் 5வது முறையாக இணையும் பிரபல நடிகை!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன், சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'சிந்துபாத்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது 'சிந்துபாத்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது