close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, June 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'சிந்துபாத்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது 'சிந்துபாத்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

'சிந்துபாத்' திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கிளாப் போர்டு புரடொக்சன்ஸ் சத்தியமூர்த்தி என்பவர் சமீபத்தில் பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

மேலும் 'சிந்துபாத்' ரிலீஸ் ஆகும் அதே ஜூன் 21ஆம் தேதியன்று ஜீவாவின் 'கொரில்லா' மற்றும் தர்ஷனின் 'தும்பா' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.