இன்னும் எத்தனை மாணவர்களை கொல்ல துணை போகப் போகிறீர்கள்? அரசுக்கு பிரபல இயக்குனர் கேள்வி

நீட் தேர்வு பயம் காரணமாக இன்று காலை மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பாக்கிய நிலையில் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக கருத்துகளை ஆவேசமாக தெரிவித்துவரும் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாணவர் விக்னேஷ் மரணமடைந்த சில நாட்களுக்குள்ளாகவே, மதுரை மாணவி ஜோதி ஶ்ரீதுர்கா நீட்தேர்வு படுகொலை செய்திருக்கிறது. நீட் தேர்வு குறித்த உறுதியற்ற நிலைப்பாடால் தமிழக அரசு இன்னும் எத்தனை மாணவர்களை கொல்ல துணைப்போக இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மாணவி ஜோதிதுர்கா போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவு வீணடிக்கப்படுகிறது.! திறமைக்கு மதிப்பளிக்காத அரசே உங்களின் நிவாரணமும், உங்களின் இரக்கமும் எங்களுக்கு தேவையில்லை. முதலில் மாணவர்களுக்கு சிந்தனை விடுதலையை ஏற்படுத்துங்கள்.!! என்றும் பா.ரஞ்சித் இன்னொரு டுவிட்டில் கூறியுள்ளார்.

முன்னதாக ’மூடர்கூடம்’ இயக்குனர் நவீன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:

இன்னும் எத்தனை உயிர்கள்?
எத்தனை கோரிக்கைகள்?
எத்தனை போராட்டங்கள்?

More News

தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… 50 பேர் உயிரிழந்த சோகம்!!!

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

நாட்டிற்குள் நுழைந்தால் சுட்டுத்தள்ளுவோம்… கொடூரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் வடகொரியா!!!

சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ள அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

'மாஸ்டர்' மாளவிகாவின் நீச்சல்குள போஸ்: இணையத்தில் வைரல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான

'விக்ரம் 60' படத்திற்காக அட்டகாசமாக தயாரான துருவ் விக்ரம்: வைரலாகும் புகைப்படம்!

சியான் விக்ரம் நடிக்கும் 'விக்ரம் 60' படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும்

108 முறை சூரிய நமஸ்காரம் தொடங்கிய முன்னணி தமிழ் நடிகை!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கடந்த 5 மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் பல நடிகர் நடிகைகள் வீட்டில் சும்மா இருந்தனர் என்பதும்,