close
Choose your channels

'விக்ரம் 60' படத்திற்காக அட்டகாசமாக தயாரான துருவ் விக்ரம்: வைரலாகும் புகைப்படம்!

Saturday, September 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் நடிக்கும் ‘விக்ரம் 60’ படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்தில் விக்ரம் வில்லனாகவும் துருவ் விக்ரம் நாயகனாகவும் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக துருவ் புதிய லுக்கில் தோற்றமளிக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விக்ரம் ஒரு படத்தின் கேரக்டருக்காக தன்னை அந்த கேரக்டராகவே மாற்றி கொள்வார் என்பது தெரிந்ததே. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கேற்ப துருவ் விக்ரமும் தற்போது ‘விக்ரம் 60’ படத்திற்கு அட்டகாசமாக உடலளவில் தயாராகியுள்ளார். இந்த படம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம் 60’ படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் பணிபுரியவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.