தாவூத் இப்ராஹிமுடன் நெருக்கமான பிரபல நடிகை: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,August 27 2020]

கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்துக்கு மூளையாக இருந்த தாவூத் இப்ராஹிம், பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் தீவிரவாத செயல்களை செய்து வரும் பிரபல தாதா தாவூத் இப்ராகிமை இந்திய அரசு தேடிவருகிறது. மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத் பாகிஸ்தானில் தான் இருப்பதாக இந்திய அரசு பல ஆண்டுகளாக ஆதாரங்களுடன் கூறி வந்த நிலையில், பாகிஸ்தானில் தான் அவர் இருப்பதாக சமீபத்தில் அந்நாட்டு அரசே ஒப்புக்கொண்டது

இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகை மெஹ்விஷ் ஹயாத் என்பவருக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதை அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்று வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை மெஹ்விஷ் ஹயாத் பாகிஸ்தான் திரையுலகில் சாதாரணமான நடிகையாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. மேலும் அவருக்கு பாகிஸ்தானின் உயரிய விருதான தம்கா - -இ - -இம்தியாஸ் என்ற விருதும் வழங்கப்பட்டது

ஒரு சாதாரண நடிகைக்கு எப்படி திடீரென அதிக வாய்ப்புகளும் விருதுகளும் கிடைத்தன என்ற கேள்வி பாகிஸ்தான் திரை உலகில் எழுந்தது. இந்த நிலையில் தற்போது தாவூத் இப்ராகிமுக்கும் நடிகை மெஹ்விஷ் ஹயாத்துக்கும் நெருக்கம் இருப்பதை அடுத்து தாவூத் கொடுத்த அழுத்தத்தினால் தான் அவருக்கு விருதுகளும் வாய்ப்புகளும் கிடைத்து இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

தாவூத்துடன் நெருக்கமாக இருக்கும் தகவல் கசிந்துள்ளதால் தற்போது நடிகை மெஹ்விஷ் ஹயாத் பெரும் கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது

More News

நெருங்கி வந்த கரடி, அசையாமல் செல்பி எடுத்த இளம் பெண்கள்: வைரலாகும் வீடியோ 

மெக்சிகோ நாட்டிலுள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் மூன்று இளம் பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவர்கள் முன் கரடி ஒன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கைலாசாவில் விவசாயம் செய்ய அனுமதி கேட்ட மதுரை விவசாயி: எங்க போய் முடியுமோ?

இந்திய அரசால் தேடப்படும் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற புதிய நாட்டை தோற்றுவித்துள்ளதாகவும், அந்நாட்டிற்கு தானே அதிபர் என்றும் சமீபத்தில் பிரகனப்படுத்தி கொண்டார்

'பிகில்' படத்தில் விஜய்க்கு டூப் போட்ட நடிகர்: 10 மாதங்களுக்கு பின் வெளியான ரகசியம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

எஸ்பிபி உடல்நிலை குறித்து சரண் மற்றும் மருத்துவமனையின் தகவல்

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

பிரார்த்தனையைவிட உலகில் வேறு எந்த மருந்தும் இல்லை: எஸ்பிபி குறித்து ஆக்சன் கிங் 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வேண்டும்