இறுதிச்சடங்கு செய்யும்போது திடீரென எழுந்து உட்கார்ந்த பெண்!

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண் ஒருவரின் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்தப் பிணம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ரஷீதா என்ற பெண் சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக கராச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவிற்கு இறப்பு சான்றிதழும் அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அளித்துள்ளனர்.

இதனால் ரஷீதாவின் இறப்பை உறுதி செய்த அவருடைய உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ரஷீதாவின் உடம்பை குளிக்க வைக்கும் போது திடீரென அவரது உடலில் அசைவு இருப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து உடனடியாக அவர் மீண்டும் மருத்துவ இறப்பு சான்றிதழ் கொடுத்த அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இறந்ததாக கருதப்பட்ட பெண் ஒருவர் இறுதிச் சடங்கின் போது திடீரென உயிரோடு எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

தலைமுடியை விற்ற பணத்தில் தற்கொலை முயற்சி: 3 குழந்தைகளின் தாய்க்கு குவிந்த உதவி

வறுமையின் கொடுமையில் சிக்கிய மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தனது தலைமுடியை விற்று மூன்று குழந்தைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுத்து மீதி உள்ள காசில் விஷம் குடித்து தற்கொலை

சிவகார்த்திகேயன் படத்திலும் பாலிவுட் வில்லன்!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாலிவுட் நடிகர்கள் வில்லன் வேடத்தில் நடித்து வருவது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. அஜித் நடித்த விவேகம் படத்தில் விவேக் ஓபராய்,

அடுத்த ஒன்பதாவது மாதத்தில் குழந்தை? தீபிகா படுகோனே

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தற்போது 'சப்பக்' படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில்

ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு: சசிகலா வழக்கறிஞர் எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் 'தர்பார்' திரைப்படத்தின் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி

அமித்ஷாவுக்கு செக் வைக்கும் சிவசேனா.. நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தை விசாரிக்க தொடங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு..!

நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கு மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்படும், இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று மகாராஷ்டிரா அரசு சார்பாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.