close
Choose your channels

இவருக்கு பதில் இவர்.. 'பொன்னி' சீரியலில் இருந்து விலகிய நடிகைக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!

Friday, June 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான 'பொன்னி’ சீரியலில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் விஜய் டிவியில் 'பொன்னி’ சீரியல் தொடங்கிய நிலையில் இந்த சீரியல் பெங்காலி மொழியில் பிரபலமான சீரியலின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 300 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சபரிநாதன். வைஷு சுந்தர் ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய கேரக்டர்களில் ஸ்ரீதேவி அசோக், சூப்பர் குட் கண்ணன், ஈஸ்வர் ரகுநாதன் உள்பட பலர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஹீரோ அம்மாவாக முதலில் ஷமிதா நடித்த நிலையில் அவர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென விலகி விட்டார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக சிந்துஜா விஜி என்பவர் ஹீரோவின் அம்மாவாக நடித்த நிலையில் தற்போது அவரும் விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ’ஆனந்த ராகம்’ உள்ளிட்ட சீரியல்களை நடித்த ரிஹானா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவருக்கு பதில் இவர் என்ற டைட்டிலுடன் ஹீரோ அம்மாவாக நடிக்க இருக்கும் ரிஹானாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment
Comment