close
Choose your channels

விஜய் சேதுபதி அல்ல.. பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

Tuesday, May 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியான நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ் அதன் பின்னர் 'வம்சம்’ ’மெரினா’ ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ‘பசங்க 2’, ‘இது நம்ம ஆளு’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ உள்ளிட்ட சில படங்களை இயக்கினார் என்பதும் கடந்த 2022 ஆம் ஆண்டு சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தை இயக்கினார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் இயக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல்படி பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வந்த ’காதலுக்கு நேரமில்லை’ என்ற படத்தை முடித்துவிட்ட நிலையில் பாண்டியராஜ் இயக்கும் படத்தில் விரைவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment