எம்.ஜி.ஆர், என்.எஸ்.கே ஆகியோர்களுக்கு பாண்டவர் அணி மரியாதை

  • IndiaGlitz, [Friday,October 02 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. நேற்று சரத்குமார் அணியின் தரப்பினர் வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து, இன்று விஷால் அணியினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி உள்பட மொத்தம் 24 பேர் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில் கூட்டத்திற்கு முன்னர் விஷால் உள்பட பாண்டவர் அணியினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகின் நகைச்சுவை சக்கரவர்த்தியாக இருந்த கலைவாணர் என்.எஸ்.,கிருஷ்ணன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்துள்ள நாசருக்கு கமல்ஹாசன் தனது ஆதரவை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருதரப்பினர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தல் தற்போது சூடிபிடித்துள்ளது.

More News

வெளிநாட்டு பத்திரிகையின் அட்டைப்படத்தில் ''வேதாளம்'' செய்தி

அஜீத் நடித்து வரும் ''வேதாளம்'' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலையில், இந்த படம் தமிழக ஊடகங்களை மட்டுமின்றி...

'புலி' திரை விமர்சனம் - ரசிக்கத்தக்க ஃபேண்டசி படம்

தமிழ் சினிமாவுக்கு ஃபேண்டசி ஜானர் புதிது. மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நட்சத்திர நடிகர் ஃபேண்டசி படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பே ‘புலி’ படத்தை அனைவரது கவனத்துக்கும் கொண்டு சென்றது. ....

நடிகர் சங்க தேர்தல். சரத்குமார் மனுதாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் மனுதாக்கல் தொடங்கியது.....

'புலி' பட ரிலீஸை பட்டாசு வெடித்து கொண்டாடிய பிரபல பெண் தயாரிப்பாளர்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் அனைத்து தடைகளையும் தாண்டி முதல்காட்சி அனைத்து நகரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.....

'புலி' அதிகாலை காட்சி ரத்து? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் இன்றைய அதிகாலை 12 மணி காட்சி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...