சாலையின் ஒரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம்… திடீரென எழுந்து நடந்து சென்ற சுவாரசியக் காட்சி!!!

  • IndiaGlitz, [Thursday,September 10 2020]

 

உத்திரப்பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் சாலை அருகே துணியால் சுற்றப்பட்டு கிடந்த ஒரு சடலத்தை ஒருவர் பார்க்கிறார். இதனால் பதற்றமடைந்த அவர் போலீஸாருக்குத் தகவலைக் கொடுக்கிறார். சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு அருகே பொதுமக்கள் அனைவரும் கூடி நிற்கின்றனர். இந்நிலையில் போலீஸாரும் அந்தப் பகுதிக்கு விரைகின்றனர்.

இப்படி சாலையில் சென்ற அனைவரும்கூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே துணியால் சுற்றப்பட்ட கிடந்த நபர் திடீரென எழுந்து நடந்து சென்றுவிடுகிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. கடைசியில்தான் புரிந்து சாலை ஒரத்தில் கிடந்தது சடலம் அல்ல. வெள்ளைத் துணியால் போத்திக் கொண்டு ஒருவர் தூங்கியிருக்கிறார் என்று.

இச்சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது கடும் வைரலாகி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக் மற்றும் ஆயிரம் ரி டிவிட்களையும் பெற்றிருக்கிறது.

More News

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்! அதிர்ச்சியில் சின்னத்திரை 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரதமருக்கு சத்யராஜ் மகள் வைத்த முக்கிய கோரிக்கை!

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் சமீபத்தில் “மகிழ்மதி இயக்கம்‌' என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் என்பதும் தெரிந்ததே.

தியேட்டர்களில் ஒளிபரப்பாகிறதா ஐபிஎல் போட்டிகள்: மத்திய அரசிடம் கோரிக்கை

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது என்பதும்

சென்னை இளைஞர்களால் ஏமாற்றப்பட்டாரா ஹர்பஜன்சிங்? பரபரப்பை ஏற்படுத்திய ரூ.4 கோடி விவகாரம்!

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் தன்னிடம் 4 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக ஹர்பஜன்சிங் பதிவு செய்திருந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிக்கன் பிரியாணி, கேரம்போர்டு வசதி: குணமாகியும் வீடு செல்ல மறுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்!

தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொரனோ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் குணம் ஆகியும் வீடு செல்ல மறுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது