கோடிட்ட இடங்களை நிரப்புவது காதலா? வாழ்க்கையா? பார்த்திபன்

  • IndiaGlitz, [Friday,November 18 2016]

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் வெற்றியை அடுத்து பார்த்திபன் இயக்கவுள்ள படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. பார்த்திபனின் குருநாதர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் பார்வதி நாயர், தம்பிராமையா,
சிங்கம்புலி உள்பட பலர் நடிக்கவுள்ளனர்
தனது படங்களின் தலைப்புகள் மூலமே தனது தனித்துவத்தை நிரூபிக்கும் பார்த்திபன் இந்த படத்திலும் புதுமையான தலைப்பு வைத்து அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளார். இந்த படத்தின் கதை குறித்து பார்த்திபன் கூறியபோது, 'பிழைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தான் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம். அது ஒரு காதலாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும் இருக்கலாம்.... அது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்கரு' என்று கூறியுள்ளார்.
திரையுலகில் நுழையும்போது தனது வாழ்க்கை கோடிட்ட இடங்களாக இருந்ததாகவும், அந்த இடத்தை நிரப்பிய குருநாதர் பாக்யராஜ் அவர்களின் மகனுக்கு இந்த படம் அவருடைய வாழ்க்கையின் கோடிட்ட இடங்களை நிரப்பும் வகையில் இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி' மற்றும் 'பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்' இணைந்து தயாரித்து இருக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கின்றார். அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இந்த படத்திற்கு நடன இயக்குநர் பிரபு தேவா நடன இயக்குனராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கடவுள் இருக்குறான் குமாரு'க்கு கிடைத்த முதல் வெற்றி

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியுள்ள 'கடவுள் இருக்குறான்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

நயன்தாராவின் 55வது படத்தின் டைட்டில் அறிவிப்பு.

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலெக்டராக நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக், இன்று அவருடைய பிறந்த நாளில், பிறந்த நாள் பரிசாக அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று அதிகாலை சரியாக 12.00 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. 'அறம்' என்பதுதான் நயன்தாராவின் 55வது படத்த&

சூர்யாவின் 36வது படத்தை இயக்கும் கிளாசிக் இயக்குனர்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'எஸ் 3' படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கும் 35வது படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்ப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்

விஜய்யின் 61வது படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது...

சிம்புவின் 'கான்' படத்தை மீண்டும் தொடர்வது எப்போது? செல்வராகவன் தகவல்

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து...