மைக்கை தூக்கி எறிந்த சம்பவம்: முத்தம் கொடுத்து சமாதானமான பார்த்திபன்!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த போது திடீரென மைக் வேலை செய்யவில்லை என மைக்கை பார்த்திபன் தூக்கி எறிந்தார். அவர் தூக்கி எறிந்த மைக், ’இரவின் நிழல்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ரோபோ சங்கர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தான் தூக்கி எறிந்த மைக் ரோபோ சங்கர் மீது பட்டதை அடுத்து ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்து சமாதானம் ஆகி உள்ளார். இதுகுறித்து தனது ஸ்டைலில் பார்த்திபன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

’மைக்கை கண்டுபிடித்தவர் ஈமைல் பெர்லினர்... மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர்... மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ண பார்த்திபன்.. முடிவில் முத்தமிட்டவர்’ என பதிவு செய்துள்ளார். மேலும் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

16 வயதில் உலகப்புகழ் பெற்ற நடிகை மர்ம மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

 16 வயதில் உலகப் புகழ் பெற்ற நடிகை ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் மாதவன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

 நடிகர் மாதவன் நடித்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

முதலமைச்சர் வீட்டின் முன் மந்திரம் சொல்ல முயன்ற கருணாஸ் பட நடிகை கைது!

முதலமைச்சர் வீட்டின் முன் மந்திரம் சொல்ல முயற்சித்த நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்துவது .

நெல்சனுடன் நேருக்கு நேர் மோதிய கவின்: வைரல் வீடியோ

நெல்சன் மற்றும் கவின் ஆகிய இருவரும் நேருக்கு நேராக  மோதும் இண்டோர்  கேம் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மனைவியுடன் திடீரென முதலமைச்சரை சந்தித்த 'ராக்கிபாய்' யாஷ்!

கேஜிஎஃப் படத்தில் நடித்த 'ராக்கிபாய்'  யாஷ், தனது மனைவியுடன் முதலமைச்சரை சந்தித்து உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.