கண்டறிந்து காயடிக்க வேண்டும்: 17 மனிதமிருகங்கள் குறித்து இயக்குனர் பார்த்திபன்

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 11 வயது சிறுமியை 22 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூர சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஒரு மாற்றுத்திறனாளி என்ற அனுதாபம் கூட இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்த மனித வடிவ மிருகங்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது கோபத்தை 'அறுத்தெறியுங்கள்' என்ற தலைப்பில் கவிதை வடிவில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது

இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன் கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது …
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர், ஈக்களாய் மொய்த்துக் கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே
நம் கண்களையும் காதுகளையும்
கூர்மையாக்கி, ___- க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!

More News

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' படத்தின் புதிய அறிவிப்பு

சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,.

விஜய்சேதுபதி, ஆர்யாவுடன் இணைந்த த்ரிஷா

கடந்த வாரம் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் சிவாவின் 'Ī

பிரபல சின்னத்திரை நடிகை சென்னையில் தற்கொலை

கடந்த சில மாதங்களாகவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில்...

17 பேர்களுக்கு ஆதரவாக ஆஜராக்கும் வழக்கறிஞர் யார்? பார் சங்க தலைவர் பேட்டி

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 12 வயது சிறுமியை மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கும் 21 மிருகங்கள் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளன.

'தமிழ்ப்படம் 3' சாத்தியமா? இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதில்

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி எதிர்பார்த்த வசூலைவிட அதிக வசூலை குவித்து வருகிறது.