close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' படத்தின் புதிய அறிவிப்பு

Wednesday, July 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் புதிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதால் படக்குழுவினர் இரவுபகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,. இதன்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் தேதி மற்றும் டீசர் ரிலீஸ் தேதியை வரும் 20ஆம் தேதி இரவு 7 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைப்பில் யுகபாரதி வரிகளில் வெளியாகவுள்ள பாடல்களை கேட்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.  
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.