close
Choose your channels

கோடி நெருப்பை ஆரம்பிக்கிற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி: 'பத்து தல' சிங்கிள் பாடல்!

Friday, February 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல’. இந்த படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று அதிகாலை 12.06 மணிக்கு பத்து தல’ படத்தின் ’நம்ம சத்தம்’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அவரது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் ஏஆர் ரகுமான் மற்றும் யோகி சேகர் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முதல் முறையில் கேட்கும் போதே சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ..

கோடி நெருப்பை ஆரம்பிக்கிற
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
அது காலம் வரும்ன்னு காத்திருக்கல
உரசி உரசி பத்திக்கிச்சு
ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு
மலையும் பயந்து விலகுமா?
புயலும் நடுங்க பழகுமா?

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், டிஜே அருணாச்சலம், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment