'தர்பார்' ரிலீஸ் தேதியில் 'பட்டாஸ்': படக்குழுவினர்களின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Sunday,January 05 2020]

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படமும் ஜனவரி 16 ஆம் தேதி தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படமும் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த இரண்டு படங்களின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜனவரி 9ஆம் தேதி ரஜினியின் ‘தர்பார்’ படம் ரிலீஸாகும் அதே தேதியில் தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அனேகமாக ‘தர்பார்’ ரிலீஸாகும் திரையரங்குகளிலும் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் திரையிடப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் பாடல்கள், மோஷன் போஸ்டர் வரை மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'மாஸ்டர்' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தாய்-மகள்களிடம் கள்ளக்காதல்: வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு நேர்ந்த கதி!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு நபர், பெண் ஒருவரிடம் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருடைய மகள்களிடமும் கள்ளக்காதலில் ஈடுபட்ட முயற்சி செய்ததால்

'தல அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அசுரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது

அந்த நடிகையின் திறமையை வெளியே கொண்டு வந்தே தீருவேன்: அட்லி

'ராஜா ராணி' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன் பின்னர் விஜய் நடித்த 'தெறி', மெர்சல் மற்றும் 'பிகில்' ஆகிய மூன்று விஜய் படங்களை