பிரபல நடிகருக்கு பேனர் வைக்கும்போது நடந்த விபத்தில் 4 பேர் பலி: போனிகபூர் இரங்கல்

பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு கட்-அவுட் வைத்த ரசிகர்கள் 4 பேர் விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரும் ஜனசேவா என்ற கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம் என்ற பகுதி அருகே ஜனசேவா கட்சித் தொண்டர்கள் மற்றும் பவன்கல்யாண் ரசிகர்கள் நேற்று இரவு பேனர்களை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது பேனரில் உள்ள இரும்பு கம்பி ஒன்று மின்சார வயரில் சிக்கியது. இதனால் மின்சாரம் பாய்ந்து 7 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்ததாகவும் மொத்தம் நான்கு பேர் பரிதாபமாக பலியானதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் தற்போது ’வாகே சாகப்’ என்ற படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் படக்குழுவினர் சார்பில் இறந்தவர்களின் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என்றும் போனிகபூர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விசில் போடு! சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் துபாய் சென்று அடைந்தன

திருச்சியில் தேர்வு எழுத வந்த தனுஷ் பட நாயகி: செல்பி எடுத்து குவித்த ரசிகர்கள்

திருச்சியில் தேர்வு எழுத வந்த தனுஷ் பட நாயகியை சுற்றி வளைத்த சக தேர்வர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கல்லூரி மாணவியின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பேராசிரியர்: பரிதாபமாக பலியான உயிர்!

ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது பேராசிரியரே வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனாவில் இருந்து குணமான விஜய் பட நாயகியின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த 'சச்சின்' 'வேலாயுதம்' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா

பிக்பாஸ் ரைசா அடுத்த படத்தில் கனெக்சன் ஆன 'மாஸ்டர்' லோகேஷ் கனகராஜ்

தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரான இயக்குனர் கார்த்திக் ராஜூ, தற்போது 'சூர்ப்பனகை