உதயநிதியின் அடுத்த படத்தில் இரண்டு ஏஞ்சல்கள்

  • IndiaGlitz, [Saturday,September 22 2018]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'சைகோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைதி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் உதயநிதி நடிக்கவுள்ள இன்னொரு படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'ஏஞ்சல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத் மற்றும் 'கயல்' ஆனந்தி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். பாயல் ராஜ்புத் சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'ஆர்.எக்ஸ் 100' என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஏஞ்சல்' படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘தொட்டாசிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையில் கவியரசு ஒளிப்பதிவில் ஜீவன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

10ஆம் வகுப்பு மாணவனை கடத்தி குடும்பம் நடத்திய இளம்பெண் மீது பாய்ந்த போக்சோ சட்டம்

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சமீபத்தில் இயற்றப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது பெண் மீது போக்சொ சட்டம் பாய்ந்துள்ளது.

தனுஷின் 'வடசென்னை' டிராக் லிஸ்ட் வெளியீடு

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது: கமல்ஹாசன்

நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும்,

கருணாஸ் பேச்சு ஆச்சரியம் அளிக்கின்றது: நடிகர் கார்த்திக் கருத்து

கருணாஸ் தம்பி அப்படி பேசியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. ஆனால் ஒன்று நான் சொல்லி கொள்வது என்னவென்றால் தமிழத்தில் வீரர்களுக்கு குறைவில்லை.

இரு சகோதரிகளின் மனவலி: ஆணவக்கொலை குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆணவக் கொலை காரணமாக கெளசல்யா என்ற பெண்ணின் கணவர் சங்கரை அவரது குடும்பத்தினர்களே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.